Suganthini Ratnam / 2016 நவம்பர் 23 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக பாரிசவாத நோய்க்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடன் சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக அதன் பணிப்பாளர் எம்.எஸ். இப்றாலெப்பை புதன்கிழமை (23.11.2016) தெரிவித்தார்.
இது ஒரு சரித்திர மைல்கல் வெற்றி என்று குறிப்பிட்ட பணிப்பாளர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில் கடந்த திங்களன்று இரவு எட்டு மணியளவில் 80 வயதான மூதாட்டி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாரிச வாதத்தின் காரணமாக உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உடனடியாக போதனா வைத்தியசாலையின் ஆரம்ப அவசர சிகிச்சைப் பிரிவின் பொது வைத்திய நிபுணர்கள் துரிதமாக இயங்கினர்.
அதனைத் தொடர்ந்து விஷேட நரம்பியல் நிபுணர் வைத்தியர் ரீ.திவாகரன் தலைமையிலான வைத்திய அணியினர் மிகத் துரிதமாகவும் சாதுரியமாகவும் செயற்பட்டு பாரிச வாதத்தினால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை ஒரு சில மணி நேரத்திற்குள்ளாகவே நூறு வீதம் மீட்டெடுத்துள்ளனர்.
தற்சமயம் பாரிச வாத நோயினால் பீடிக்கப்பட்ட மூதாட்டி பூரண சுகம் பெற்றுள்ளார்.
இது இந்த வைத்தியசாலையிலும் கிழக்கு மாகாணத்திலும் முதன் முறையாக நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான சிகிச்சையாகும்.
சாதாரணமாக பாரிச வாத நோயாளிகள் நீண்டகால சிகிச்சை முறைக்கே உட்படுத்தப்படுவார்கள். ஆனால், இது ஒரு சில மணிநேரங்களுக்குள்ளாகவே வெற்றியளித்த சிகிச்சை முறை என்பதில் பெருமையடைகின்றோம்.
Thrombolysis Treatment எனப்படுகின்ற இரத்தக் கட்டியைக் கரைக்கும் சிகிச்சை முறைமூலம் சிகிச்சை அளிக்கும் முறை இலங்கையில் ஒரு சில அரசாங்க வைத்தியசாலைகளிலேயே காணப்படுகின்றது. அந்த சிகிச்சை முறை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடங்கப்பட்டள்ளது முழுக் கிழக்கு மாகாண மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.
எனவே பாரிச வாத நோயினால் தாக்கப்படுவோர் கூடிய பட்சம் 3 மணித்தியாலங்களுக்குள்ளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அணுகி தங்களை குணப்படுத்திக் கொள்ள முடியும்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025