Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜென்னி டொங்கே தலைமையிலான 9 உறுப்பினர்கள் இந்தக்குழுவில் உள்ளடங்கியிருப்பதுடன் இலிங் சௌத்தல் நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திரசர்மா, லண்டன் நாடாளுமன்ற ஒன்றியத்தைச் சேர்ந்த நிகல் இவான்ஸ் உட்பட 5 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உள்ளடங்கியுள்ளனர்.
இதன்போது,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இவர்கள் இனப்பெருக்கம் மற்றும் பாலியல் சுகாதாரம் தொடர்பான மீளாய்வு சந்திப்பில் கலந்து கொண்டனர்.
வைத்தியாசாலை பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை குடும்பத்திட்ட சங்க தலைவி பெமிலா சேனநாயக்க, வைத்திய நிபுணர் கே.கடம்பநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போதனா வைத்தியசாலையின் கீழ் இயங்கும் மிதுறுபியச நட்பு இல்லத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனப்பெருக்க மற்றும் பாலியில் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆலோசனைகளை வழங்க இலங்கையில் சிறந்த நிலையமாகவும் முதன்மை நிலையமாகவும் மட்டக்களப்பு நட்பு இல்லம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025