Princiya Dixci / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
புனர்வாழ்வு அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி, மலிவு விற்பனைக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ஈட்டுக் கொடுப்பனவுக் காசோலை வழங்கல் என்பன, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன், இராஜாங்க அமைச்சரின் செயலாளர் திருமதி.சாந்தி நாவுக்கரசன் கௌரவ அதிதியாகவும், சிறப்பு அதிதியாக மட்டு மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
34 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
6 hours ago