Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வா.கிருஸ்ணா
இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரனுக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை பிணை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரனுக்கும் பிணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இவர்கள் இருவரும் தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளிலும் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார்.
அத்துடன், ஒவ்வொரு வாரத்திலும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்கு முன்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இவர்கள் இருவரும் கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
13 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
33 minute ago