2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பிரசாந்தன் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள்  உறுப்பினருமான பூ.பிரசாந்தன்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இந்தக் கொலை தொடர்பாக  வியாழக்கிழமை இரவு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

காத்தான்குடி பொலிஸார் இவரை ஆரையம்பதியில்  கைதுசெய்ததாகவும் இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X