2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பாலியல் தொழில் விவகாரம்: சிவகீதாவுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 நவம்பர் 21 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பில் உள்ள தனது இல்லத்தின் ஒரு பகுதியில் பாலியல் தொழில் நடாத்தியமை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட,  மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு பேரையும், டிசெம்பர் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா, நேற்றுத் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டார்.

 மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் உள்ள முன்னாள் மேயரின் வீட்டின் ஒரு பகுதியில் நடாத்தப்பட்டுவந்த விடுதியில் இருந்து, முன்னாள் மேயர், அவரது கணவர் மற்றும் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஐந்து பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட மூன்று பெண்களும் ஆணொருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தவழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X