2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாலம் புனரமைக்காமையால் மக்கள் துயரம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 28 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள புளியடிமடுப் பாலமும் அதனருகே போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மதகும், முற்றாக உடைந்துள்ளதனால், அவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.

புளியடிமடுப் பாலம் கடந்த ஒருவருடத்துக்கு முன்னரே உடைந்து விழுந்து விட்டது. அதன் பின்னர், அந்தப் பாலத்துக்கருகே தற்காலிகமாக ஒரு மதகு அமைக்கப்பட்டு, அதனூடாகவே பயணிகள், போக்குவரத்தினை மேற்கொண்டு வந்தனர்.

எனினும், கடந்த வாரம் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தினால், தற்போது அந்தத் தற்காலிக மதகும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது வாகனங்கள் செல்லமுடியாமல் இவ்வீதி தடைப்பட்டுள்ளது.

இப்பாதையைப் பயன்படுத்திய மக்கள் மேலதிகமாக பல மைல் தூரம் சுற்றி வளைத்துப் பயணம் செய்து தமது கிராமங்களை அடைய வேண்டியுள்ளது.  புளியடிமடுப் பாலத்தின் வழியாக தினமும் சென்று வரும் அரச அலுவலர்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள்  உட்பட இன்னும் பல மக்களும் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.

உடைந்து போயுள்ள இப்பாலத்தை உடனடியாக அமைத்துத் தருமாறு பிரதேச மக்களும், பயணிகளும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரி நிற்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X