2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புலமைப்பரிசிலில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட சித்தாண்டி ஸ்ரீ இராமகிருஸ்ணா வித்தியாலயத்தில் இம்முறை தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாக்கிழமை வித்தியாலய அதிபர் சு.நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது.

இப் பரீட்சைக்கு தோற்றிய 52 மாணவர்களில் 13 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேலும் 09 மாணவர்கள் 100 புள்ளிக்கு மேலும் 04 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலும் பெற்றுள்ளனர்.

பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்குடா வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X