2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பிள்ளைகளின் மூளை, உள ஆரோக்கியம் கற்றலுக்கு முக்கியமானவை

Niroshini   / 2016 நவம்பர் 22 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

“கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளின் மூளை, உள ஆரோக்கியங்கள் என்பன முக்கியமானவை. சரியான போசாக்கு இருக்கின்றபோதுதான் பிள்ளைகள் சரியான முறையில் கல்வியில் ஈடுபாடு காட்டுவார்கள். அந்த வகையில், போசாக்கு என்பது முக்கியத்துவம் மிக்கதாகும்” என மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.

நாடு பூராகவும் ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்துறை சார் போசாக்கு செயற்றிட்டத்தின் கீழ் மாவட்ட ரீதியில் போசாக்கு மற்றும் வலுவூட்டல் தொடர்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வழிப்பூட்டல் செயற்திட்ட செயலமர்வு, இன்று செவ்வாக்கிழமை (22) மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கல்வியில் பிள்ளைகளை ஈடுபடுத்துவதற்கு முன்னர் அவர்கள் கல்வி கற்பதற்கான தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா என்பது முக்கியமாகும். கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளின் மூளை, உள ஆரோக்கியங்கள் முக்கியமானவை. சரியான போசாக்கு இருக்கின்றபோதுதான் பிள்ளைகள் சரியான முறையில் கல்வியில் ஈடுபாடு காட்டுவார்கள். அந்த வகையில், போசாக்கு என்பது முக்கியத்துவம் மிக்கதாகும்.

அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் மேம்போக்கான சிந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வரும் இச்செயற்றிட்டம் எதிர்கால இலங்கையின் சந்ததிகள் போசாக்குடையவர்களாகவும் அறிவு திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில், முன்பள்ளிக ஆசிரியர்களே எதிர்பார்க்கின்ற எதிர்கால சந்ததியினரான குழந்தைகளுடன் நேரடியாகத் தொடர்புபடுகின்றவர்கள், அதே நேரம் அவர்களுடைய பெற்றோர்களாகும். அவர்களுக்கு போசாக்கு தொடர்பான அறிவூட்டல்களைச் சரியாகச் சென்றடைய வைப்பதன்மூலம் இதனை அடைந்து கொள்ள முடியும்.

எதிர்கால சமூகத்தினை ஆரோக்கியமானதாக உருவாக்கும் வகையில் முன்பள்ளி ஆசிரியர்கள் செயற்படும் போது சிறப்பானதொரு மாற்றம் கிடைக்கும். எனவே சரியாக கல்வியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சமூகத்துக்கான செயற்பாடுகளே முக்கியமாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X