2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பிள்ளையானை சந்தித்த கட்சியின் முக்கியஸ்தர்கள்

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

குற்றமற்றவராக நான் வெளியில் வருவேன் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று புதன்கிழமை தன்னிடம் தெரிவித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று(14) புதன்கிழமை குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் கொண்டு வந்தபோது முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை நானுட்பட எமது கட்சியின் பொருளாளர் மற்றும் பிரதி தலைவர், கொள்கை பரப்புச்செயலாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் வைத்து சந்தித்து பேசியதாகவும் பிரசாந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றமற்றவராக நான் வெளியில் வருவேன் என சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறியதுடன் ஜனநாய வழிக்கு திரும்பி கிழக்கு மாகாணத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த பாடுபட்டேன்.மேலும், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்தேன். இந்த நிலையில் என் மீது சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டாகும். நல்லாட்சியில் நீதியான விசாரணைகள் இடம்பெறுமென நான் கருதுகின்றேன். அதனால் நான் குற்றமற்றவனாக வெளியில் வருவேன் என அவர் கூறியதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நடவடிக்கை மற்றும் அதன் அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் எங்களிடம் பேசினார் எனவும் பிரசாந்தன் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X