2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் அழிப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வாகரைப் பிரதேசத்திலுள்ள கடைகள், பேக்கரிகள் மற்றும் நடமாடும் விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுவந்த பழச்சாறு மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களும்  பாவனைக்குதவாத ஒருதொகுதி மரக்கறிகள் மற்றும் பழங்களையும் கைப்பற்றி அழித்ததாக பொதுச் சுகாதாரப் பரிசோதர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, உரிமையாளர்களும் விற்பனையாளர்களுமாக சுமார் 15 பேர் எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் வாகரைப் பிரதேச சபையின் வருமானப் பரிசோதகரும் இணைந்து வாகரையில் புதன்கிழமை (07) சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, லொறியொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத மரக்கறிகளையும் பழங்களையும் கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, பதிவு செய்யாமல் உணவுப் பொருட்களை  தயாரித்து விற்பனை செய்துவந்த பேக்கரி கண்டுபிடிக்கப்பட்டதுடன், உணவுப்பொருட்களையும் பழச்சாறுப் போத்தல்களும்; கைப்பற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X