Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா ஹரன்
நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில்; போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழுக்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் பிரதேசத்துக்கான குழு வியாழக்கிழமை (03) அமைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதன் அவசியம் குறித்து அரசாங்கத்தின் யோசனையையும் அதற்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் பிரதேச செயலாளர் தெளிவுப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கிராம உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமக்குழுத் தலைவர்களை உள்ளடக்கிய போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழு தாபிக்கப்பட்டு அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உத்தியோகத்தர்கள், திருக்கோவில் வலயக் கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கான உத்தியோகத்தர்கள், திவிநெகும திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago
57 minute ago