Niroshini / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தம்பிப்பிள்ளை தவக்குமார்,எஸ்.சபேசன்
வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தில் பசு மாடுகளை ஏற்றிவந்த நபர், வெல்லாவெளிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பாலையடிவட்டைப் பிரதேசத்தில் சிறியரக கனரக வாகனத்தில் 5 மாடுகளை ஏற்றி வந்தமை தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்தே, குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்து களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, கைப்பற்றப்பட்டுள்ள மாடுகளில் ஒரு மாடு இறந்துள்ளதாகவும் அம்மாட்டை பிரேத பரிசோதனை நடத்துமாறு களுவாஞ்சிக்குடிப் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உதரவிட்டதற்கு இணங்க, பிரேத பரிசேதனை செய்யப்பட்டு அதிக மாடுகள் ஏற்றி வந்தமையால் மூச்சித் திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டு இருப்பதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள வைத்திய அதிகாரி டாக்டர் சி.துஷ்யந்தன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .