2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

படகுச் சேவை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கிரான் - தொப்பிகல பிரதான வீதி இன்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வெள்ளப்பெருக்குக் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாய்ந்தகல் மற்றும் தொப்பிகல பிரதேசங்களை அண்மித்த கிராமங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் மற்றும் இராணுவத்தினரினால் இரு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X