Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
வா.கிருஸ்ணா / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கான வயதெல்லை 45 என்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது 45 வயதைக் கடந்திருக்கின்றார்கள். எனவே, வயதுகளை எல்லைப்படுத்தாமல் 45 வயது என்பதையும் சற்றுக் கடந்து கொடுத்தால், அவர்களது துயரங்களும் குறையும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைபபின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது 7,000 கருத்திட்ட உதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டன. திடீரென அது நிறுத்தப்பட்டு, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
“இருப்பினும், இன்னும் அது வழங்கப்படவில்லை. எத்தனையோ கனவுகளின் மத்தியில் இந்நியமனம் பெற்றவர்கள் இன்று தொழில் இல்லாமல் இருக்கின்றார்கள்.
“எனவே, நிறுத்தப்பட்டிருக்கின்ற அந்தத் தொழில்வாய்ப்பு மீண்டும் அவர்களுக்குக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“தற்போது சாதாரணதரம் சித்தியடையாதவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்று ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதுவும் நல்ல விடயம் தான். ஆனால், சாதரணதரம், உயர்தரம் சித்தியடைந்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் என்றெல்லாம இருக்கின்றார்கள் அதனையும் கருத்திற்கொள்ள வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
58 minute ago
1 hours ago