Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மகிழடித்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.தவனேசன் தெரிவித்தார்.
மகிழடித்தீவு வைத்தியசாலையில் நடைபெற்ற ஒன்றுகூடலில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.
நாட்டில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரசு தொற்று மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் பரவாமல் தடுக்கும் முகமாக செயலணியொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலாளர், பிரதேச சபையினர், பொலிஸார், இராணுவத்தினர், கிராம அமைப்புகள், ஏனைய திணைக்களங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளடங்கிய வகையில் இச்செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago