2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பதிவு செய்யும் திகதியில் மாற்றம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 02 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நல்லதம்பி நித்தியானந்தன்

2015ஆம் -2016ஆம் ஆண்டுக்கான  கிழக்குப் பல்கலைக்கழத்தின்  கலை, கலாசாரப் பீடத்துக்குப் புதிய மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அப்பீடாதிபதி முனியாண்டி ரவி தெரிவித்தார்.

எதிர்வரும் 05ஆம் திகதி மேற்படி பீடத்துக்கான புதிய மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை நடைபெறவிருந்தது.   இந்நிலையில், இப்பதிவு நடவடிக்கை  எதிர்வரும் 19ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

19ஆம் திகதி பதிவுகளை மேற்கொள்வதற்காக வருகை தரும் மாணவர்களுக்கான வகுப்பு, அன்றையதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.  எனவே, விடுதிகளில் தங்குவதற்குரிய சகல ஏற்பாடுகளுடனும் வருமாறும் கலை, கலாசாரப் பீட அலுவலகம்  தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X