2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பத்து நாட்களாக மூதாட்டியைக் காணவில்லை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 டிசெம்பர் 28 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கொண்டையன்கேணிக் கிராமத்திலிருந்து வாழைச்சேனை பேத்தாழைக் கிராமத்துக்குச் சென்ற நாகமணி மாதம்மை (வயது 72) எனும் மூதாட்டியைக் காணவில்லை என, வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த 17ஆம் திகதி காலை 9 மணியளவில் கொண்டையன்கேணியிலுள்ள மகள் புவனேஸ்வரியின் வீட்டிலிருந்து, வாழைச்சேனை, பேத்தாழையிலுள்ள தேவாலயம் ஒன்றுக்கு இவர் கால்நடையாகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஆனால், சில நிமிட நேர நடைப் பயணத்தில் தேவாலயத்துக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டிய அவர், கடந்த 10 நாட்களாகியும் காணாமல் போயுள்ளார் என்றும் பல இடங்கள் தேடிப் பார்த்தபோதும் இதுவரை எந்தத் தகவலும் கிட்டவில்லை என்றும் இவர், கடைசியாக நீல நிற சாறி அணிந்திருந்ததாகவும் உறவினர்கள், பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

தமது தாயைப்பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் 0776437199, 0779408064 என்ற இலக்கங்ளோடு தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறு, அவரது மகன்கள் கேட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X