Editorial / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பன்மைத்துவத் தத்துவ அடிப்படையில் அனைத்து மக்களும் செயற்பட்டால், நல்லிணக்கமும், அபிவிருத்தியும், அச்சமின்றிய வாழ்வும் ஏற்படுமென முகாமைத்துவ ஆலோசகர் ஜெபமாலைமுத்து பெனடிக்ற் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட பன்மைத்துவம் தொடர்பான பயிற்சி நெறி மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (08)நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைகள், ஏனைய பிரதேச சபைகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முகாமைத்துவ ஆலோசகர் பெனடிக்ற்; பன்மைத்துவம் தொடர்பான
இடராயத்தம் மேற்கொள்வது பல்லின மக்கள் வாழும் முழு இலங்கையிலும் பன்மைத்துவம் என்பது புரிந்து கொள்ளப்படுதல் வேண்டும்.
குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பன்மைத்துவத்தைப் பேணிப் பாதுகாத்து, மக்கள் மனதில் மதிப்பையும் உயரிய அந்தஸ்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
காலாகாலமாக அந்நியப்பட்ட சிந்தனைகளில், முரண்பாட்டு, மனப்பாங்குகளில் செயலாற்றி வந்து பழக்கப்பட்ட நமக்கு, அடுத்த சமூகத்தவர் சார்பாக ஆதரவு தெரிவிப்பதுக்கும் அந்தஸ்தை வழங்குவது க்கும் முடியாமலுள்ளது.
இது ஒரு சவால் நிறைந்த பணி, ஆனாலும் சவால்களை எதிர்கொண்டு இப்பணியை திறம்பட செய்து முடிப்பதே உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அர்ப்பணிப்பாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .