Suganthini Ratnam / 2016 ஜனவரி 21 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
கைத்தொழில் பயிற்சியாளர்கள் தங்களின் தொழில் வாண்மையை விருத்தி செய்வதற்கான பயிற்சிநெறி, மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள பற்றிக் பிறின்டிங் செய்யும் தொழில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடும்மீன், வெளிச்சவீடு, மட்டக்களப்பு கோட்டை, மட்டக்களப்பு கேட் உள்ளிட்ட மரபுரிமை மிக்க இடங்களை துணிகளில் பற்றிக் பிறின்டிங் செய்யும் செயல்முறைகள் மற்றும் மெழுகைப் பயன்படுத்திப பல்வேறுபட்ட கலையம்சம் பொருந்திய உருவங்களை பதிக்கும் செயல்முறைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் வடிவமைப்பு மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள், ஊறணி தொழிற்பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளர்கள் உட்பட நெசவு, மட்பாண்டம், தையல், பன்வேலை தொழில் பயிற்சியாளர்கள் 16 பேரும் அமெரிக்கா, சீனா, தாய்வான், இந்தோனேசியா மற்றும் துருக்கி நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் தளபாட வடிவமைப்பு, வீட்டுத் தோட்டக்கலை மற்றும் கட்டடக்கலை, துணிகள் மற்றும் கைத்தொழில் வடிவமைப்பு பீடங்களில் கல்வி பயிலும் 18 மாணவர்களும் இப்பயிற்சிநெறியில் கலந்துகொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .