Princiya Dixci / 2021 மே 25 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா, வா.கிருஸ்ணா, எச்.எம்.எம்.பர்ஸான், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஹஸ்பர் ஏ ஹலீம்
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கு முகமாக வெள்ளிக்கிழமை (21) இரவு 11 மணி தொடக்கம் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து, இன்று (25) கிழக்கு மாகாண மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.
வீதியோர வியாபாரங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. மரக்கறி விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பேக்கரிகள், மருந்தகங்கள் மற்றும் மீன் சந்தைகள் போன்றவை திறந்திருந்ததைக் காணமுடிந்தது.
தங்களுக்குத் தேவையான பொருட்களை சுகாதார நடைமுறைகைளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைப் பேணி பொதுமக்கள் கொள்வனவு செய்தனர்.
இதன்போது அரிசி, பருப்பு, சீனி, மரக்கறி மற்றும் மீன் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஒரு வாரத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்கியே ஆக வேண்டும் என்பதற்காக வர்த்தவர்கள் இவ்வாறு விலைகளை அதிகரித்து விற்பனை செய்ததாகவும் வேறு வழியில்லாமல் தாம் பொருட்களை வாங்கி வந்ததாகவும் பொதுமக்கள் அங்கலாய்த்தனர்.
இதேவேளை, உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை கண்காணிப்பதற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் வர்த்தக நிலையங்களிலும் சந்தைகளிலும் கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்றையதினம் பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய போக்குவரத்து முறைகள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறுவோரை கண்டறியும் நடவடிக்கைகளை பொலிஸாரும் இராணுவத்தினரும் முன்னெடுத்தனர்.
இதன்போது தேவையற்ற முறையில் வெளிவந்தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்ததுடன், சிலர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025