2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பயிர்களை நாசம் செய்த 50 மாடுகள் பிடித்து கட்டிவைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்துக்கு உட்பட்ட வாகனேரி முள்ளிவட்டவான் விவசாய கண்டத்தில், விவசாயச் செய்கையை துவம்சம் செய்த மாடுகளை, விவசாயிகள் பிடித்து கட்டிவைத்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (15) இடம்பெற்றுள்ளது.

முள்ளிவட்டவான் விவசாய கண்டத்தில், நாற்பதுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுமார் மாடுகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்துள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், ஐம்பது மாடுகளைப் பிடித்து கட்டி வைத்துள்ளனர். 

சம்பவ இடத்துக்கு கிராம அதிகாரி வருகை தந்து, விவசாயிகள், மாடு உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இருசாராருக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X