2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பரீட்சார்த்திகளுக்கு அசௌகரியம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 20 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 120க்கும் மேற்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த கலைமாணி வெளிவாரிப் பொதுப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, காத்தான்குடியில் பரீட்சையும் கருத்தரங்கும் இடம்பெற்றதால் தாம் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக பரீட்சார்த்திகள் தெரிவித்தனர்.

இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தால் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைமாணி வெளிவாரிப் பொதுப் பட்டப்படிப்பு, முதலாம் வருட மாணவர்களின் இரண்டாம் பருவக் கருத்தரங்கு, கடந்த சனி மற்றும் ஞாயிறு (18,19) ஆகிய நாட்களில் இடம்பெற்றது.

இக்கருத்தரங்கிற்கும் பரீட்சைக்கும் தோற்றுவதற்காக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவர்களும் வருகை தந்திருந்தனர்.

நீண்ட தூரம் பயணம் செய்து தாம் குறிப்பிட்ட கருத்தரங்கிற்கும் பரீட்சைக்கும் தோற்றிய போதிலும் போக்குவரத்து நெருக்கடி, தங்குமிட வசதியின்மை, களைப்பு இன்னும் பலவேறுபட்ட சிரமங்களை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பலர் குறிப்பிட்ட இருநாட்களும் திருகோணமலையிலிருந்து பொதுப்போக்குவரத்து பஸ்களில் சுமார் 4 மணித்தியாலங்கள் நின்று கொண்டே இருவழிப் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த சிரமத்தையும் அசௌகரியத்தையும் கவனத்தில்கொண்டு, இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் திருகோணமலையிலேயே பரீட்சையையும் கருத்தரங்கையும் நடத்த ஏற்பாடு செய்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X