2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழக மாணவியைக் கடத்திய நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்.வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வெல்லாவெளி மண்டூர் தம்பலவத்தைப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த  பல்கலைக்கழக மாணவி ஒருவர் இனம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் வான் உட்பட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டடிருந்தனர்.

கைது செய்யப்பட்ட  மூவர்   களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஜ.றிஸ்வி முன்நிலையில் நேற்று (16) செவ்வாய்கிழமை ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி மண்டூர் தம்பலவத்தை பிரதேசத்தில் வைத்து இனம் தெரியாதவர்களினால் பல்கலைகழக மாணவி கடத்தப்பட்ட நிலையில் சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X