2025 மே 07, புதன்கிழமை

பல்கலையில் விதிக்கப்பட்ட தடை நீங்கியது

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
 
கிழக்குப் பல்கலைக்கழக கலை,கலாசார கற்கை நெறியின் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களுக்கு பல்கலையில் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை, இன்று(20) அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் எம்.எப்.எம்.மர்சூக் தெரிவித்தார்.
 
எனவே மாணவர்கள்  இன்றிலிருந்து பல்கலைகழக்கத்துக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர். நேற்று(19) மாலை நடைபெற்ற விஷேட கூட்டத்தின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 
கலை பீடத்தின் மூன்றாம் வருட  மாணவர்கள் இரண்டாம் வருட மாணவர்களை ஒன்றுகூடலுக்காக அழைத்தவேளை ஏற்பட்ட வாய்தர்க்கம், கைகலப்பில் முடிந்தது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆறு மாணவிகள் உடல் உபாதை காரணமாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபகப்பட்டனர்.
 
இதையடுத்து பல்கலைக்கழகத்தின் கலாசார கற்கை நெறியின் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களுக்கான விரிவுரை நடவடிக்கைகள், மறுஅறிவித்தல்வரை நிறுத்தப்பட்டதுடன் மாணவர்கள் விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X