Freelancer / 2023 மே 16 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
நாடு முழுவதிலுமுள்ள 8க்கும் மேற்பட்ட பொலிஸ் பிரிவுகளில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 2,600 மில்லி கிராம் ஹெரொயின் போதைப் பொருளுடன் காத்தான்குடியில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் இதை தெரிவித்தார்.
காத்தான்குடியியைச் சேர்ந்த 35 வயதுடைய இந்நபர் அம்பாறை இறக்காமத்தில் திருமணம் செய்துள்ளார்.
அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, தெல்தெனிய, புல்மோட்டை, கந்தளாய், சம்மாந்துறை உட்பட 8 பொலிஸ் நிலையங்களுடாக பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவராவார்.
கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். R
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026