Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Janu / 2025 ஜூலை 09 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் இருவரிடம் தான் விசேட குற்ற விசாரணை பிரிவு சிஐடி என கூறி ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட போலி சிஐடியை ஒருவரை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் வெளிநாட்டு முகவர் ஒருவரிடம் வெளிநாடு செல்வதற்காக பணத்தை கொடுத்து ஏமாந்த நிலையில் அந்த வெளிநாட்டு முகவருக்க எதிராக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
இதனை அறிந்து கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ புலனாய்வு பிரில் செயற்பட்டு வந்தவர் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கி தான் விசேட குற்ற விசாரணைப் பிரிவு சிஐடி , எனவே குறித்த வெளிநாட்டு முகவரிடம் உடன் பணத்தை பெற்று வருவதாகவும் உடன் இந்த பணத்தை வாங்கி தர முடியும் அதற்கு பணம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலியான சிஐடி யிடம் ஒருவர் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவையும் மற்றவர் 3 ஆயிரம் ரூபாய் உட்பட ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டு முகவரிடம் பணத்தை வாங்கி கொடுக்காமல் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளதையடுத்து அவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த இருவரும் பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்தனர்.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், அவரது வீட்டில் வைத்து திங்கட்கிழமை (7) இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து செவ்வாய்க்கிழமை அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 21 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
24 minute ago
50 minute ago