2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பல் சமய பேரவையொன்றை நிறுவவும்

Kogilavani   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'தேசிய மட்டத்தில் பல் சமய பேரவையொன்றை நிறுவி, இன, மத ரீதியான முரண்படுகளை இயலுமானளவு குறைப்பதன் ஊடாக தேசிய மீளிணக்கத்தை அடைந்து கொள்ளமுடியும்' என மட்டக்களப்பு பல் சமய கருத்தாடல் மையம் அரசியல் திருத்தம் தொடர்பான முன்மொழிவை நேற்று முன்வைத்தது.

பல் சமய கருத்தாடல் மையத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்ஷெய்ஹ் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி தலைமையிலான பல் சமய கருத்தாடல் மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட குழு உறப்பினர்;கள் இவ் யோசனையை, அரசியல் யாப்பு திருத்தம் தொடார்;பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவிடம் முன் வைத்தனர்.

மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற இந்த அமர்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பல் சமய கருத்தாடல் மையத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்ஷெய்ஹ் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

'மீளிணக்கம் மற்றும் நிரந்தர சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி முழுக் கல்வி முறைமையையும் மாற்றியமைத்தல் வேண்டும்.

மும்மொழிக் கொள்கையை அதிக விணைத்திறன் மிக்கதாகவும் செயற்திறன் மிக்கதாகவும் நடைமுறைப்படுத்துவதற்காக அவசியமான கட்டமைப்பு வசதிகளையும் தனிப்பட்ட இயலுமைகளையும் விருத்தி செய்தல் வேண்டும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவரகள் மற்றும் இளைஞர்கள் யுவதிகளை ஆற்றுபப்டுத்துவதற்காக தேசிய மட்டத்தில் வேலைத்திட்டம் ஒன்றை மற்றும் நிறுவனம் ஒன்றையும்; அமைத்தல் வேண்டும்.

மீளிணக்கம் மற்றும் சகவாழ்வுக்காக அவசியப்படும் சமத்துவத்தன்மையை மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்தும் கனவுடன் கூடிய எதிர்கால இலங்கையை உருவாக்குவதற்காக அரசியலமைப்பு சீர்;திருத்தமொன்றை அறிமுகப்படுத்தல்.

மீளிணக்கம் மற்றும் சகவாழ்வுக்;கு அவசியப்படும் ஊடகக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான மனித ஆற்றல் மற்றும் அகக் கட்டமைப்பு வசதிகளை ஊக்குவித்தல்.

இலங்கையானது அங்கு வாழும் அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது என்பதை மிகத் தெளிவாக வரையறை செய்வதோடு அது தொடர்;பாக அரசியலமைப்பின் முன்னுரையில் மிகத் தெளிவாகவும் குறிப்பிடல் வேண்டும்.
 
நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்;வாக முன் வைக்கப்பட்ட மாகாண சபைகள் கொண்டுள்ள அதிகாரங்கள் எவை? கொண்டிராத அதிகாரங்கள் எவை? என்பன தெளிவாக வரையறை செய்யப்படல் வேண்டும்.

மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பு மூலம் வரைசெய்யப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசு எவ்வித தலைiயீட்டையும் பலப் பிரயோகத்தையும் செய்யாத வகையில் சட்ட ஏற்பாடுகள் முன் வைக்கப்படல் வேண்டும்.

இலங்கை பல் சமையங்களைப் பின் பற்றும் நாடு என்ற வகையில் சமய சுதந்திரமானது அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்படுவதோடு பின்பற்றப்படும் அனைத்து சமயங்களுக்கும் சமத்துவமான இடமளிக்கப்படல் வேண்டும்'  என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X