2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பள்ளிவாசலில் கற்றல் நிலையம் ஆரம்பம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

மட்டக்களப்பு - காத்தான்குடி பெரிய மௌலான பள்ளிவாசலினால் மாணவர்களுக்கான சுய கற்றல் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆண் மாணவர்களின் கல்வி நடவடிக்களை மேம்படுத்தும் நடவடிக்கைளில் ஒன்றாக காத்தான்குடி பெரிய மௌலான பள்ளிவாசல் நிர்வாகம் திறமை வாய்ந்த ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்கள்  சுயமாக கற்கின்ற நிலையமொன்றை பள்ளிவாசல் மேல் மாடியில் ஆரம்பித்துள்ளது.

மாணவர்களின் கல்வி, ஆன்மிகம், உளவியல் விருத்தி, ஆளுமை விருத்தி நூலகப் பயன்பாடு மற்றும் வாசிப்பு திறன் வளர்த்தல என பல்வேறு திட்டங்களை நோக்கமாக கொண்டு, பல்வேறு கல்வியலாளர்களின் உதவியுடன் இவ் சுய கற்றல் நிலையம் இயங்க இருக்கின்றது.

பல ஆசிரியர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்க இருக்கின்ற இத்திட்டமானது, வாரத்தில் ஐந்து நாட்கள் மாலை 6 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

ஆரம்பத்தில் ஆண்டு 10, 11 கற்கின்ற மாணவர்களை கொண்டு இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பன ஆரம்ப நிகழ்வு, பள்ளிவாசலின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான அக்பர் தலைமையில் நேற்று (22) மாலை நடைபெற்றது.

இதில் காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார், காத்தான்குடி சித்தீக்கியா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.அப்துல் கபூர், பிஸ்மி நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.பி.அக்ரம் நழீமி ஆகியோர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X