Editorial / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஸலாமத் ஜும்ஆப்பள்ளிவாயலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், இன்று (5) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றமை தொடர்பில், பள்ளிவாயலின் நிர்வாகத்தின் முறைப்பாடு செய்துள்ளனர் என்று, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காத்தான்குடி தெற்கு எல்லையிலுள்ள, ஸலாமத் ஜும்ஆப்பள்ளிவாயலின் கட்டட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலே, உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.
அத்துடன் பள்ளிவாயலுக்குள் இருந்த சிறிய அலுமாரியும் உடைக்கப்;பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


20 minute ago
31 minute ago
38 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
38 minute ago
57 minute ago