Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
ஏறாவூர் அக்பர் ஜும்மா பள்ளிவாயலுக்கு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான அல் ஹாபிழ் நசீர் அஹமட் நேற்று(06) இஷாத் தொழுகையின் பின்னர் கையளித்தார்.
அல் குர் ஆனைக் கற்கும் ஹாபிழ்கள், இங்கு கற்றுவருகின்றமையால் அவர்கள் தமது கல்வி ஆவணங்களை பிரதியெடுக்க அடிக்கடி வெளியே செல்ல வேண்டியிருப்பதைக் கவனத்திற் கொண்டு, இதனை அவர் வழங்கி வைத்துள்ளார்.
இதன் போது, தமது நீண்ட காலத் தேவையினை பூர்த்தி செய்தமைக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு ஹாபிழ்கள் மற்றும் ஆலிம்கள் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .