Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 12 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
கண்டியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிகளுடன் புறப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபை ரிதிதென்ன சாலைக்குச் சொந்தமான பஸ், வெலிக்கந்தை – நாமல்கம பிரதேசத்தில் நேற்று (11) மாலை குடைசாய்ந்ததில் அதில் பயணித்த சாரதி, நடத்துநர் உட்பட 09 பேர் படுகாயமடைந்துள்ளனரென, வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் இருவர் பாரதூரமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, அதே இடத்தில் ஏக காலத்தில் நடந்த வான்-சைக்கிள் மோதுண்ட பிறிதொரு விபத்தில் சைக்கிள் பயணி ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
கண்டியிலிருந்து நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்டு இந்த பஸ், கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலை வழியாக வெலிக்கந்தையூடாச் சென்று கொண்டிருக்கும்போது, மாலை 6.20 அளவில் பஸ் வீதியிலிருந்து விலகி குடைசாய்ந்தது.
இவ்வேளையில் உதவிக்கு விரைந்த பிரதேச வாசிகளால் பஸ்ஸிலிருந்த சாரதி, நடத்துநர் உட்பட பயணிகள் மீட்டெடுக்கப்பட்டதோடு, காயமடைந்தவர்கள் அருகிலிருந்த வெலிக்கந்தைப் பிரதேச வைத்தியசாலையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, இந்த பஸ் விபத்துக்குள்ளான அந்த இடத்தில் ஏற்கெனவே வான் ஒன்று சைக்கிளில் சென்றவரை மோதியதில் சைக்கிளில் சென்றவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
அந்த வேளையில் வன் தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸில் மோதுவதற்கு நெருங்கியபோதே, பஸ் சாரதி வீதி மருங்கில் பஸ்ஸைச் செலுத்தியுள்ளார்.
இதன்போதே, பஸ் குடைசாய்ந்ததாக ரிதிதென்ன சாலை முகாமையாளர் ஏ.எம். ஜவ்பர் தெரிவித்தார்.
இவ்விபத்துகள் குறித்து வெலிக்கந்தைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago