2025 மே 23, வெள்ளிக்கிழமை

பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

நடராஜன் ஹரன்   / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு, கல்முனை நெடுஞ்சாலையில் தேத்தாத்தீவுக்கும் களுதாவளைக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

குறித்த விபத்து, சனிக்கிழமை (09) காலை, இலங்கைப் போக்குவரத்து சபை பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இடம்பெற்றுள்ளது.  

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த கல்முனை, டிப்போவுக்குச் சொந்தமான பஸ், பயணிகளை இறக்குவதற்காக வீதியோரத்தில் நிறுத்தப்பட்ட பொழுது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பஸ்ஸின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  

காத்தான்குடி, டீன் வீதியைச் சேர்ந்த இளைஞர்களே, படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளிலும் பலத்த சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X