Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 29 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முகமாக, மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்து கிழக்கு மாகாண அரச பாடசாலைகளும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, பகுதியளவில் இன்று (29) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமுகமளித்து, மாணவர்களை உள்வாங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 05 கல்வி வலயங்களிலுமுள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டதுடன், ஆசிரியர்கள் சமுகமளித்து, நிர்வாகச் செயற்பாடுகள் நடைபெற்றன.
மேலும், அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும் கற்றல் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்றன.
இதேவேளை, அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள், கிழக்கு மாகாண பாடசாலைகளில் சீராகப் பின்பற்றப்படுகின்றதா என்பதை அவதானிக்க வலய ரீதியாக கண்காணிப்புக் குழுக்கள் விஜயம் செய்கின்றன.
இதற்கென மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுக்கும் கல்வி அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
இக் குழு பாடசாலைக்கு விஜயம் செய்து, பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் தொடர்பாக ஆராயவுள்ளனர்.
மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்களைக் கொண்டு, இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
(சகா, ஏ.எல்.எம்.ஷினாஸ், எம்.எஸ்.எம். ஹனீபா, ஆர்.ஜெயஸ்ரீராம், ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.நூர்தீன், எச்.எம்.எம்.பர்ஸான், ஜவ்பர்கான், எம்.ஏ.றமீஸ், வி.சுகிர்தகுமார், ஏ.ஆர்.எம்.றிபாஸ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
42 minute ago
53 minute ago