2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பாதசாரி மீது மோதிய ஜீப் ; பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

Janu   / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

செங்கலடி கரடியனாறு பிரதான வீதி காயங்குடா பகுதியில் வீதியில் நடந்து சென்ற பாதசாரி மீது கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி ஓட்டிச் சென்ற ஜீப் வண்டி மோதியதில் பாதசாரி படுகாயமடைந்த சம்பவம்  சனிக்கிழமை ((07) இரவு  இடம்பெற்றுள்ளதுடன் குறித்த பொலிஸ் அதிகாரியை கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன இடமாற்றம் பெற்றுச் செல்கின்றதையடுத்து அவருக்கு இரவு போசனம் வழங்கி  பிரியாவிடை செய்யும் நிகழ்வு பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதில் மாவட்டதிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்

இந்த  நிகழ்வுக்கு கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன் சொந்த ஜீப் வண்டியில் சென்று நிகழ்வின் பின்னர் இரவு 10.00 மணியளவில் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு ஜீப் வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த போது காயங்குடா பகுதியில் பிரதான வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது ஜீப் மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த பாதசாரி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற பொலிஸ் பொறுப்பதிகாரி செங்கலடி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில்  ஞாயிற்றுக்கிழமை (8) காலை சிகிச்சையை பெற்று வெளியேறியுள்ளார்

இந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பான சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸ் பொறுப்திகாரியை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .