2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பாதீடு தயாரிப்புத் தொடர்பில் கேட்டறிதல்

Editorial   / 2017 நவம்பர் 24 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு - வாகரை பிரதேச சபையின் பாதீடு தயாரிப்பது தொடர்பாக, சனசமூக நிலையங்களின் கருத்துகளை கேட்டறியும் விசேடக் கலந்துரையாடல் வாகரை பிரதேச சபையின் செயலாளர் ஜோசப் சர்வேஸ்வரன் தலைமையில், நேற்று (23) நடைபெற்றது.

இவ்விசேட கலந்துரையாடலில், பிரதேச சபையின் தற்போதைய வருமான மூலங்கள் குறித்தும், அதிகரித்துக்கொள்ள கூடிய வருமான வழிகள் குறித்தும் செயலாளரால் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான வருமானத்தை அடிப்படையாகக் கொண்டும், கிடைக்கப்பெறும் நிதியைக் கொண்டும் 2018 ஆம் ஆண்டுக்குரிய வரவு-செலவு திட்டத்தை வரையும் பொருட்டு, மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அதனூடாக எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளக்கூடிய சகல வேலைத்திட்டங்களின் விவரங்கள் குறித்த அறிக்கைகள் சேகரிக்கப்பட்டன.

இன்போது அதிகளவாக பௌதீக வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளும், கோரிக்கைகளுமே எழுத்து மூல ஆவணங்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், நடப்பாண்டிலும் கடந்த காலங்களிலும் பிரதேச சபையால் செய்து முடிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்த மீள்பார்வையும் கலந்துகொண்டோர் முன்னிலையில், ஆவணமாக காண்பிக்கப்பட்டன.

தற்போது வாகரை பிரதேச சபைக்கான புதிய செயலாளராக பதவியேற்றுள்ள ஜோசப் சர்வேஸ்வரன்,  பிரதேச சபையுடன் இணைந்து செயற்படும் சனசமூக நிலையங்கள் மற்றும், ஏனைய அமைப்பினரிடம் அறிமுகம் செய்து கொள்ளும் நிகழ்வாகவும் இது அமைந்திருந்தது.

அறிமுக கலந்துரையாடலாகவும், ஆலோசனைகள் மற்றும்,  கருத்துககளை கேட்டறியும் கலந்துரையாடலாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஹாரூண்,  நிதி முகாமையாளர் எஸ்.ஜெயரூபன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜீ.ரமேஸ், கிழக்கிலங்கை சமூக அபிவிருத்தி மையத்தின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் பிரதேச இசபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட சனசமூக நிலையங்களை சேர்ந்த பிரிதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X