ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப சில நாள்களாக ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக, அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடுகளை, இந்த அரசாங்கம் பாரபட்சமின்றி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வெல்லாவெளிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்துக்கு, நேற்று (11) அவர் நேரடியாக விஜயம் செய்து, விவசாயிகளின் நிலைமைகளைக் கண்டறிந்தார்.
இப்பிரதேசத்தில் 346 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவுற்றுக் காணப்படுவதோடு, பெருமளவிலான சோளன் பயிர்ச் செய்கையும் அழிவடைந்துள்ளதாக, கிராம விவசாயிகள், நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
மழைப்பருவ காலத்தில் வெள்ளம் குறுக்கிடுவதால் தரைவழிப் பாதைகள் அனைத்தும் முற்றாக மூழ்குவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதனால் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலைக்குத் தாங்கள் தள்ளப்படுவதோடு, பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் கூறினர்.
இதனைக் கேட்டறிந்து கொண்ட ஸ்ரீநேசன் எம்.பி, பாதிக்கப்பட்ட சகலருக்கும் அரசாங்கம் பாரபட்சமின்றி ழுழுமையாகவும், உடனடியாகவும் இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago