2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பாரம்பரிய நெல்லினங்கள் அறுவடை

Freelancer   / 2023 பெப்ரவரி 06 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ. சக்தி

மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத் திணைக்கள விரிவாக்கல் பிரிவின் பழுகாமம் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் கீழுள்ள களுமுந்தன்வெளிக் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த பாரம்பரிய நெல் மற்றும் உபஉணவு பயிற்செய்கை அறுவடை விழா, விவசாயப் போதனாசிரியர் பரமேஸ்வரன் சகாப்தனின் ஒழுங்கமைப்பில் வியாழக்கிழமை(02) நடைபெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ப. பேரின்பராசா, தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ். சித்திரவேல், போரதீவுப் பற்று உதவி பிரதேச செயலாளர் வி. துலாஞ்சன், பாடவிதான உத்தியோகஸ்தர்களான திருமதி லாவன்யா செந்தீபன், என். லஸ்மன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அப்பகுதியில் 120 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டிருந்த பாரம்பரிய நெல்லினங்களான பச்சைப் பெருமாள், மடத்தவழு ஆகியவை இதன்போது அறுவடை செய்யப்பட்டன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X