Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நடைபவணி, மட்டக்களப்பில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நடைபவணி, கல்லடிப்பால சிறுவர் பூங்காவிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நிறைவு பெறவுள்ளது.
இது தொடர்பாக தேசிய பாரிசவாத சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“உலகளாவிய ரீதியில் உயிர் கொல்லும் அல்லது ஊனமாக்கும் நோய்களில் பாரிசவாதம் மூன்றவாது இடத்தில் இருக்கின்றது.
“ஆறு பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் தாக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு.
“தேசிய பாரிசவாத சங்கம், பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நடவடிக்கைகளையும் சுகாதார பணியாளர்கள், பாரிசவாத நோயாளர்களின் பராமரிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளையும் நடத்துவதனூடாக பாரிசவாத பராமரிப்பையும், பாரிசவாத தடுப்பிற்குரிய நடவடிக்கைகளையும் ஊக்குவிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றது.
குருதியமுக்கம், குருதியில் சீனியின் அளவு என்பன இதன்போது இலவசமாக பரிசோதிக்கப்படுவதுடன், இந்த நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சுவரொட்டிப் போட்டியும் அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிசவாத நடைபயணமானது, கடந்த காலங்களில் கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய நகரங்களிலும் நடைபெற்ற போதிலும் இம்முறை மட்டக்களப்பு நகரில் நடைபெறவிருக்கின்றது.
இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
18 May 2025