Janu / 2026 மார்ச் 26 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் இருந்து வியாழக்கிழமை (26) நண்பகல் குதித்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாலத்திற்கு அருகாமையில் கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸாருக்கு, அவ்வீதியால் பயணித்த பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் உதவியுடன், குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் உயிரிழந்த நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கல்லடி பாலத்தில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்போது இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வ. சக்தி

4 minute ago
23 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
23 minute ago
43 minute ago