ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 மே 22 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப்பல்கலைக் கழகத்தில் பாவித்த கழிக்கப்பட்டப் பொருள்களை விற்பனை செய்யும்போது, பகிரங்க ஏல விற்பனை முறையைக் கவனத்தில் கொள்வதில்லை என, புகார் எழுந்துள்ளது.
ஏல விற்பனை மூலம், பாவித்த, பழைய மற்றும் கழிக்கப்பட்ட பொருள்களை விலைக்கு வாங்கி, அவற்றைப் வியாபார நோக்கங்களுக்காக பயன்படுத்துவோரே, இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கூடாக, உயர்க்கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த முறைப்பாட்டில்,
உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் வந்தாறுமூலை கிழக்குப்பல்கலைக் கழகத்தில், பாவித்து கழிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும்போது, “பகிரங்க ஏல விற்பனைமுறை” நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது, கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் கழிக்கப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படும் போது, அமைச்சின் அதிகாரிகள் மூலம், பகிரங்க ஏல விற்பனை அறிவித்தல் விடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் மாறிய பின்னர், கடந்த தடவை உபவேந்தராகப் பணியாற்றியவர், காலம் தொட்டு இவ்வாறான இரகசிய பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாகவும் இது, சட்ட திட்டங்களுக்கு மீறிய செயலாகவும் எனவே, இது குறித்து அதிகாரிகள் பாரபட்சப் போக்கை நிறுத்தி, சகலருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .