2025 மே 03, சனிக்கிழமை

பினான்ஸ் கம்பனியில் தீ

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள பிரபல தனியார் பினன்ஸ் நிறுவனத்தில் நேற்றிரவு 07 மணியளவில் திடீரென தீப்பற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அருகிலுள்ள வியாபார நிலையங்களின் ஊழியர்கள் இணைந்து தீயை தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முற்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவ்விடத்துக்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் படையினரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை, அந்த பகுதியில் சுமார் ஒரு மணித்தியாலம் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், காத்தான்குடி பிரதேசத்துக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததுடன் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது.

இந்தத் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X