Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு பிரதானி நீல் கவனாக் மற்றும் மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமாருக்குமிடையிலான சந்திப்பொன்று, மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் மாவட்டத்தின் தற்போதைய நிலை, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பிரித்ததானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு பிரதானி நீல் கவனாக், தனது மட்டக்களப்பு விஜயத்தின் போது, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், அரசியல் தரப்புப் பிரதிநிதிகள், சிவில் பிரதிநிதிகளையும் சந்தித்து, மட்டக்களப்பு மக்கள் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
சம்பிரதாயபூர்வமான வகையில் அமைந்த இச்சந்திப்புகளில் அரசியல் ரீதியான விடயங்களும் கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago