2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

‘பிரிந்த மதங்களையும் ​இணைத்தது’

வா.கிருஸ்ணா   / 2019 மே 22 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டில் பிரிந்துபோயிருந்த மதங்களையும் இனங்களையும் ஒன்றுபடுத்தியுள்ளது  என, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூறும் நிகழ்வு, மட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் ஆலயம், இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றின் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து, பயங்கரவாதிகள் நடத்திய இந்தக் கோரத்தாக்குதல், என்ன நோக்கத்துக்காக நடத்தப்பட்டதோ, அவர்களின் அந்த நோக்கத்திலிருந்து பின்வாங்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.  

இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், பூணுல்கள் சிலுவைச் சுமந்தன என்றும் காவியுடைகள் கண்ணீர் வடித்தன என்றும் காக்கிச் சட்டைகள் காவல் காத்தன என்றும் கூறிய அவர், உறவுகளுக்காக அனைவரும் மனவேதனையடைந்தனர் என்றும் கூறினார்.  

தற்போது, நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து வீறுகொண்டு எழுந்துள்ளோம் என்றும் அதேபோன்று, பல்வேறு வகையான பார்வையில் பார்க்கப்படுகின்ற மதங்கள் எல்லாம் ஒன்றிணைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X