Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 25 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, ஜனநாயகப் பாதையில் சுயமாக ஈடுபட வழிவிடுமாறு கோரி, அடையாள உண்ணாவிதரப் போராட்டமொன்று, இன்று (25) இடம்பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரின் ஏற்பாட்டியில், மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்ற இந்த உண்ணாவிரப் போரட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், உப தலைவர் நா.திரவியம், கட்சியிருந்து உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2005ஆம் ஆண்டு, மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான “பிரதீப் மாஸ்டர்” என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, “கஜன் மாமா” எனப்படும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago