2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பீடாதிபதியாக மீண்டும் தெரிவு

Freelancer   / 2023 ஜனவரி 29 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் மீண்டும் போட்டியின்றி வெள்ளிக்கிழமை (27) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக வெளியேறிய இவர் நுவான் கடலுணவு தனியார் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாகவும் விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சில் விஞ்ஞான தொழில்நுட்ப அதிகாரியாகவும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் (தொழில்நுட்பம்) ஆகவும் இலங்கை வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்த இவர் கடந்த 2016ம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .