Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2018 ஜூன் 03 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னிடத்தில் வருபவர்களை, அவமானம், அசிங்கம், அருவருப்புச் செய்கின்ற வேலைகளை யாரும் செய்து விடாதீர்கள் எனத் தெரிவித்த கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அவ்வாறு செய்தால், அது தனக்குச் செய்யும் துரோகமாக இருக்குமெனவும் குறிப்பிட்டார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய மக்களுக்கு, வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மண்டபத்தில், நேற்று (02) மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "எங்களோடு இணைந்து கொண்டவர்களை, நாங்கள் கடந்தகால அரசியலில் இரண்டாம் பட்சமாகப் பார்த்தது கிடையாது. அதேபோன்று நீங்களும் அவர்களுக்கு அந்தக் கௌரவத்தை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், தன்னிடத்தில் புதிதாக வருபவர்களை, தான் எவ்வாறு கௌரவப்படுத்துகிறாரோ, அதே போன்று, ஏனையோரும் அவர்களுக்குக் கௌரவத்தை வழங்க வேண்டும் எனவும் கோரினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
4 hours ago
9 hours ago