2025 மே 09, வெள்ளிக்கிழமை

புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி

மட்டக்களப்பு மாவட்ட படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், புத்தகக் கண்காட்சியும் விற்பனையும், இம்மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர சபையின் நூலக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இவ்விரு நாள்  கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்ட படைப்பாளிடமிருந்து அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருட தேசிய வாசிப்பு மாதம், “வாசிக்கும் சமூகத்தை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X