2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டையொட்டி சட்டவிரோத வர்த்தக நிலையங்கள் முற்றுகை

Editorial   / 2018 ஏப்ரல் 12 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

சித்திரைப் புத்தாண்டையொட்டி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தல் அளத்தல் கருவிகளைப் பாவித்து வர்த்தகத்தில் ஈடுபட்ட 100 வர்த்தக நிலையங்கள், நேற்று முன்தினமும் (11) நேற்றும் (12), நியமங்கள் சேவைகள் அளவீட்டு அலகுகள் திணைக்கள  அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டன.

மாவட்ட செயலாளரின் பணிப்புரையின் பேரில், கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, செங்கலடி, மட்டக்களப்பு நகரம், ஒல்லிக்குளம், கல்லடி ஆகிய நகரங்களில் இந்த திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்ட 9 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென, மாவட்ட நியமங்கள் சேவைகள் அளவீட்டு அலகுகள் திணைக்கள் பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.

இறைச்சிக்கடைகள், மீன் கடைகள், புடவைக்கடை, பலசரக்குக் கடைகளில் முத்திரையிடப்படாத தராசுகளைக் கொண்டு, வர்த்தக நடவடிக்கைககளில் ஈடுபட்டமை, அனுமதி பெறாத தராசுகளைப் பாவித்தமை போன்ற குற்றங்களின் கீழ், இவர்களில் சில வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X