Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புராதன இடங்களைப் பார்வையிட்டு, அவற்றை எல்லைப்படுத்தவென விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தால் பட்டியலிடப்பட்டுள்ள புராதன இடங்களையே, அளவை மேற்கொண்டு, இக்குழு எல்லைப்படுத்தவுள்ளது.
இதற்தமைய, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் க.கருணாகரணை, மாவட்டச் செலயகத்தில் வைத்து மேற்படி குழு நேற்று (26) சந்தித்தது.
இதன்போது, அடையாளப்படுத்தப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்கு முன்னர், குறித்த பிரதேச செயலாளரை அனுகி, சம்மந்தப்பட்ட பிரிவு கிராம சேவகர், அதனோடு தொடர்புடைய உத்தியோகத்தர்கள், மாவட்டத் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி எடுக்கப்படும் ஆலோசனை மற்றும் முடிவுகளுக்கமைவாக செயற்படுமாறு, மாவட்டச் செயலாளர் ஆலோசனை வழங்கினார்.
இக்குழுவின் முதற்கட்ட செயற்பாடாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 102 இடங்களைப் பார்வையிட்டு அளவை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025